முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு.
14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்.
இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம்.
அர்ச்சகர்கள் & பணியாளர்களுக்கு 4000 ரூபாய் 10 கிலோ அரிசி & 13 வகை மளிகை பொருட்கள்.
உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்.
மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம்.
திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் & 2000 உதவித்தொகை.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அறநிலையத்துறையின் கீழ் மாதச் சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஓரளவு உதவியாக 4000 ரூபாய் 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவர் மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது இவை தவிர திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் திருநங்கை இறக்கை 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
